ஜீவசமாதி என்றால் என்ன... திருமூலர் வகுத்துள்ள இலக்கணங்கள்!
ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை சமன்செய்தல் என்றுப் பொருள். ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இருகண்களினும் மேலாகப் பின்பற்றி வருகின்றனர். உடலையும், உள்ளத்தையும் மாசின்றி பேணிக்காக்கின்றனர். அலைமோதும் ஜீவனை ஒருநிலைப்படுத்தி, தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை. 'தன்னை அறிய தனக்கொரு கேடில்லை' என்கிறார் திருமூலர். இறைவனை அடைய அனைவரும் சொன்ன ஒரே வழி, 'அன்புமார்க்கம்'தான்.  யோக் என்றால் சமஸ்கிருதத்தில் வழி என்று பொருள். இறைவனைக் காணும் வழியைக் கண்டவனே யோகி. ஆதி போன்ற முத்திரையில், யோகி அமரும் ஆசிரமம்தான் யோகாஸ்ரமம் எனவும் கூறுகின்றனர். சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல. இறைவனால் நியமிக்கப்பட்ட காரியங்களை ஒருகாலத்திற்க்குள் நடத்தி காட்டிய பிறகு முக்தி அடைவதே ஆகும். சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்சநிலை என உரைக்கப்படுகிறது. இவர்களின் உட...